Sriman Narayaneeyam - Dasaka 17 - துருவ சரிதம் (ச்லோகம் 173)

Dasaka 17 - துருவ சரிதம்

தாதே விஷண்ணஹ்ருதயே நகரீம் கதேந ஸ்ரீநாரதேந பரிஸாந்த்வித சித்த வ்ருத்தௌ பாலஸ்த்வதர்பிதமநா: க்ரமவர்த்திதேந நிந்யே கடோரதபஸா கில பஞ்சமாஸாந் தாதே விஷண்ண ஹ்ருதயே நகரீம் கதேந ஸ்ரீநாரதேந பரிஸாந்த்வித சித்த வ்ருத்தௌ பால: த்வத் அர்பித மநா: க்ரம வர்த்திதேந நிந்யே கடோர தபஸா கில பஞ்ச மாஸாந் ताते विषण्णहृदये नगरीं गतेन श्रीनारदेन परिसान्त्वितचित्तवृत्तौ । बालस्त्वदर्पितमनाः क्रमवर्धितेन निन्ये कठोरतपसा किल पञ्च मासान्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! துருவனைக் காணாமலும், அவனை அவமதித்ததாலும் அவன் தந்தை மிகவும் மனவருத்தப்பட்டான். அவனுடைய துக்கத்தை நாரத முனிவர் நகரத்திற்குச் சென்று விளக்கினார். சிறுவனான துருவன் உன் மீது முழுவதுமாகத் தனது மனதினைத் திருப்பி, நாளுக்கு நாள் தவம் வளர்ந்த விதமாக, மிகவும் கடுமையான தவத்தை ஐந்து மாதம் மேற்கொண்டான் அல்லவா?