Sriman Narayaneeyam - Dasaka 17 - துருவ சரிதம் (ச்லோகம் 172)
Dasaka 17 - துருவ சரிதம்
ஆகர்ண்ய ஸோSபி பவதர்சநநிச்சிதாத்மா மாநீ நிரேத்ய நகராத் கில பஞ்சவர்ஷ: ஸந்த்ருஷ்ட நாரத நிவேதித மந்த்ரமார்க: த்வாமாரராத தபஸா மதுகாநநாந்தே ஆகர்ண்ய ஸ: அபி பவத் அர்ச்சன நிச்சிதாத்மா மாநீ நிரேத்ய நகராத் கில பஞ்ச வர்ஷ: ஸந்த்ருஷ்ட நாரத நிவேதித மந்த்ர மார்க: த்வாம் ஆரராத தபஸா மது கானந அந்தே आकर्ण्य सोऽपि भवदर्चनिश्चितात्मा मानी निरेत्य नगरात्किल पञ्चवर्षः । सन्दृष्टनारदनिवेदितमन्त्रमार्ग - स्त्वामारराध तपसा मधुकाननान्ते
குருவாயூரப்பா! துருவனுக்கு ஐந்து வயதே நிரம்பியிருந்தபோதிலும் தனக்கு நேர்ந்த அவமானத்தைப் பொறுக்க முடியவில்லை. அதனால் தன் தாய் கூறியதுபோல் உன்னைத் த்யானிக்க முடிவு செய்து அந்த நாட்டில் இருந்து வெளியில் கிளம்பினான். நடு வழியில் அவன் நாரதரைக் கண்டான். அவரிடம் மந்திரங்களை உபதேசமாகப் பெற்றான். பின்னர் யமுனையின் கரையில் உள்ள மதுவனம் என்ற காட்டிற்குள் சென்று உன்னைக் குறித்து தவம் இயற்றினான் அல்லவா? (நாரதர் உபதேசித்த மந்திரம் “ஓம் நமோ பகவதே வாஸுதேவாய” என்பதாகும்)