Sriman Narayaneeyam - Dasaka 17 - துருவ சரிதம் (ச்லோகம் 171)

Dasaka 17 - துருவ சரிதம்

த்வந்மோஹிதே பிதரி பச்யதி தாரவச்யே தூரம் துருக்திநிஹத: ஸ கதோ நிஜாம்பாம் ஸாSபி ஸ்வகர்மகதி ஸந்தரணாய பும்ஸாம் த்வத்பாதமேவ சரணம் சிசவே சசம்ஸ த்வத் மோஹிதே பிதரி பச்யதி தாரவச்யே தூரம் துருக்தி நிஹத: ஸ கத: நிஜ அம்பாம் ஸா அபி ஸ்வ கர்ம கதி ஸந்தரணாய பும்ஸாம் த்வத் பாதம் ஏவ சரணம் சிசவே சசம்ஸ त्वन्मोहिते पितरि पश्यति दारवश्ये दूरं दुरुक्तिनिहतस्स गतो निजाम्बाम् । साऽपि स्वकर्मगतिसन्तरणाय पुंसां त्वत्पादमेव शरणं शिशवे शशंस

குருவாயூரப்பா! உனது மாயையினால் மனைவிக்கு வசப்பட்டவனாக இருந்த உத்தானபாதன், தனது மனைவியின் செயலைத் தடுக்கவில்லை. அவனது கடும் சொற்களால் மனம் உடைந்த துருவன் தன் தாயிடம் சென்றான். அவள் அவனிடம், “நமது தீய வினைப்பயன்களைத் தடுக்க பகவான் பாதங்களையே நாடவேண்டும்”, என்று உபதேசம் செய்தாள் அல்லவா?