Sriman Narayaneeyam - Dasaka 17 - துருவ சரிதம் (ச்லோகம் 170)

Dasaka 17 - துருவ சரிதம்

அங்கே பிது: ஸுருசி புத்ரகமுத்தமம் தம் த்ருஷ்ட்வா த்ருவ: கில ஸுநீதி ஸுதோSதிரோக்ஷ்யந் ஆசிக்ஷிபே கில சிசு: ஸுதராம் ஸுருச்யா துஸ்ஸந்த்யஜா கலு பவத்விமுகைரஸூயா அங்கே பிது: ஸுருசி புத்ரகம் உத்தமம் தம் த்ருஷ்ட்வா த்ருவ: கில ஸுநீதி ஸுத: அதிரோக்ஷ்யந் ஆசிக்ஷிபே கில சிசு: ஸுதராம் ஸுருச்யா துஸ்ஸந்த்யஜா கலு பவத் விமுகை: அஸூயா अङ्के पितुस्सुरुचिपुत्रकमुत्तमं तं दृष्ट्वा ध्रुवः किल सुनीतिसुतोऽधिरोक्ष्यन् । आचिक्षिपे किल शिशुश्सुतरां सुरुच्या दुस्सन्त्यजा खलु भवद्विमुखैरसूया

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! (ஒரு நாள்) ஸுநீதியின் மகனான துருவன் என்பவன் தன்னுடைய தந்தை மடி மீது, ஸுருசியின் மகனான உத்தமன் அமர்ந்திருந்ததைக் கண்டான். இதனால் தானும் அமர ஆவல் கொண்டான். அப்போது குழந்தை என்றும் பார்க்காமல் அவனை ஸுருசி கீழே தள்ளினாள். உன்னிடம் பக்தி செலுத்தாதவர்கள் தங்கள் பொறாமை குணத்தை விட இயலாது.