Sriman Narayaneeyam - Dasaka 17 - துருவ சரிதம் (ச்லோகம் 169)
Dasaka 17 - துருவ சரிதம்
உத்தாநபாத ந்ருபதேர்மநுநந்தநஸ்ய ஜாயா பபூவ ஸுருசிர்நிதராமபீஷ்டா அந்யா ஸுநீதிரிதி பர்த்துராநாத்ருதா ஸா த்வாமேவ நித்யமகதி: சரணம் கதாSபூத் உத்தாநபாத ந்ருபதே: மநு நந்தநஸ்ய ஜாயா பபூவ ஸுருசி: நிதராம் அபீஷ்டா அந்யா ஸுநீதி: இதி பர்த்து: அநாத்ருதா ஸா த்வாம் ஏவ நித்யம் அகதி: சரணம் கதா அபூத் उत्तानपादनृपतेर्मनुनन्दनस्य जाया बभूव सुरुचिर्नितरामभीष्टा । अन्या सुनीतिरिति भर्तुरनादृता सा त्वामेव नित्यमगतिश्शरणं गताऽभूत्
குருவாயூரப்பா! மநுவின் மகனான உத்தானபாதன் என்பவனுக்கு ஸுருசி மற்றும் ஸுநிதி என இரு மனைவிகள் இருந்தனர். இவர்களில் ஸுருசி என்பவள், மன்னனுக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். ஸுநிதி என்பவள் அவனால் நிராகரிக்கப்பட்டாள். இதனால் புகலிடம் இல்லாத அவள், உன்னையே சரணம் என்று புகுந்தாள். (விளக்கம் காண்க).
ஸ்ரீமத்பாகவதத்தின் நான்காம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 8 முதல் 12 முடிய, இந்தத் தசகத்தில் கூறப்பட்டுள்ளன.