Sriman Narayaneeyam - Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம் (ச்லோகம் 168)
Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம்
க்ருத்தேசமர்திதமக: ஸ து க்ருத்தசீர்ஷோ தேவ ப்ரஸாதித ஹராதத ஸப்தஜீவ: த்வத் பூரித க்ரதுவர: புநராப சாந்திம் ஸ த்வம் ப்ரசாந்திகர பாஹி மருத்புரேச க்ருத்த ஈச மர்தித மக: ஸ து க்ருத்த சீர்ஷ: தேவ ப்ரஸாதித ஹராத் அத ஸப்த ஜீவ: த்வத் பூரித க்ரதுவர: புந: ஆப சாந்திம் ஸ த்வம் ப்ரசாந்திகர பாஹி மருத்புரேச कृद्धेशमर्दितमखः स तु कृत्तशीर्षो देवप्रसादितहरादथ लब्धजीवः । त्वत्पूरितक्रतुवरः पुनराप शान्तिं स त्वं प्रशान्तिकर पाहि मरुत्पुरेश
குருவாயூரப்பா! (தனது மனைவியையும், தன்னையும் அவமதித்த காரணத்தினால்) சிவன் கோபம் கொண்டார். தக்ஷனின் யாகத்தையும் அழித்து, அவன் தலையையும் சீவினார். அதன் பின்னர் தேவர்களால் சமாதானப்படுத்தப்பட்ட சிவன் மூலமாகவே, அவன் மீண்டும் உயிர் பெற்றான். அதன் பின்னர் உன்னால் யாகம் மேற்கொண்டு மன அமைதியை மீண்டும் பெற்றான். இப்படியாக மன அமைதியை அளிப்பவனே! என்னைக் காப்பாற்ற வேண்டும்.***