Sriman Narayaneeyam - Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம் (ச்லோகம் 167)

Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம்

தக்ஷஸ்து தாதுரதிவாலநயா ரஜோSந்த: நாத்யாத்ருதஸ்த்வயி ச கஷ்டமசாந்திராஸீத் யேந வ்யருந்த ஸ பவத்தநுமேவ சர்வம் யஜ்ஞே ச வைரபிசுநே ஸ்வஸுதாம் வ்யமாநீத் தக்ஷ: து தாது: அதிவாலநயா ரஜ: அந்த: ந அதி ஆத்ருத: த்வயி ச கஷ்டம் அசாந்தி: ஆஸீத் யேந வ்யருந்த ஸ பவத் தநும் ஏவ சர்வம் யஜ்ஞே ச வைர பிசுநே ஸ்வ ஸுதாம் வ்யமாநீத் दक्षस्तु धातुरतिलाळनया रजोऽन्धो नात्यादृतस्त्वयि च कष्टमशान्तिरासीत् । येन व्यरुन्ध स भवत्तनुमेव शर्वं यज्ञो च वैरपिशुने स्वसुतां व्यमानीत्

குருவாயூரப்பா! ப்ரும்மாவின் குணங்களை அதிகமாகக் கொண்டிருந்த அவனுடைய புத்ரனாகிய தக்ஷ ப்ரஜாதிபதி, ரஜோ குணம் அதிகமாக விளங்கியதால் தனது அறிவை இழந்தான். அதனால் உன்மீது பக்தி செலுத்தாமல், அமைதி இல்லாமல் இருந்தான். கஷ்டம்! இதனால் உன்னுடைய மற்றோர் அம்சமான சிவனைத் தூஷித்தான். அந்த வெறுப்பைத் தனது யாகத்தில் வெளிப்படுத்தினான். தனது மகளும், சிவனின் பத்தினியுமாகிய தாக்ஷாயணியை அவமதித்தான்.