Sriman Narayaneeyam - Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம் (ச்லோகம் 166)
Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம்
த்ருஷ்ட்வோர்வசீம் தவ கதாம் ச நிசம்ய சக்ர: பர்யாகுலோSஜநி பவந்மஹிமாவமர்சாத் ஏவம் ப்ரசாந்த ரமணீயதராவதாராத் த்வத்தோSதிகோ வரத க்ருஷ்ணதநுஸ்த்வமேவ த்ருஷ்ட்வா ஊர்வசீம் தவ கதாம் ச நிசம்ய சக்ர: பர்யாகுல: அஜநி பவத் மஹிமா அவமர்சாத் ஏவம் ப்ரசாந்த ரமணீயதர அவதாராத் த்வத்த: அதிக: வரத க்ருஷ்ணதநு: த்வம் ஏவ दृष्ट्वोर्वशीं त्वं कथां च निशम्य शक्रः पर्याकुलोऽजनि भवन्महिमावमर्शात् । एवं प्रशान्तरमणीयतरोऽवतारस् त्वत्तोऽधिको वरद कृष्णतनुस्त्वमेव
குருவாயூரப்பா! இந்திரன் ஊர்வசியை நோக்கியும், உனது லீலைகளைக் கேட்டும் உனது மஹிமையை உணர்ந்தான். தனது தாழ்மையான செயலை எண்ணி மனவருத்தம் கொண்டான். வரதனே! சாந்தமும் அமைதியும் அழகும் உடைய இந்த நரநாராயண அவதாரத்தை விட மேலானது என்றால் நீ எடுத்த க்ருஷ்ணாவதாரமே ஆகும். (க்ருஷ்ணனை விட மேலான அவதாரம் இல்லை என்கிறார்)