Sriman Narayaneeyam - Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம் (ச்லோகம் 165)
Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம்
ஸம்மோஹநாய மிலிதா மதநாதயஸ்தே த்வத் தாஸிகா பரிமலை: கில மோஹமாபு: தத்தாம் த்வயா ச ஜக்ருஹுஸ்த்ரபயைவ ஸர்வ ஸ்வர்வாஸி கர்வ சமநீம் புநரூர்வசீம் தாம் ஸம்மோஹநாய மிலிதா: மதந ஆதய: தே த்வத் தாஸிகா பரிமலை: கில மோஹம் ஆபு: தத்தாம் த்வயா ச ஜக்ருஹு: த்ரபயா ஏவ ஸர்வ ஸ்வர்வாஸி கர்வ சமநீம் புந: ஊர்வசீம் தாம் सम्मोहनाय मिळिता मदनादयस्ते त्वद्दासिकापरिमळैः किल मोहमापुः । दत्तां त्वया च जगृहुस्त्रपयैव सर्व - स्वर्वासिगर्वशमनीं पुनरुर्वशीं ताम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனக்கு மயக்கத்தை ஏற்படுத்த வந்த மன்மதன் முதலானோர் உன்னுடைய பணிப்பெண்களிடம் இருந்து வீசிய நறுமணத்தின் மூலம் மயங்கி நின்றார்கள் அல்லவா? இது தவிர, நீ அவர்களுக்கு, ஸ்வர்கத்தில் உள்ளவர்கள் கர்வத்தை அடக்கும் விதமாக ஊர்வசி என்பவளை கொடுக்க, அவர்களும் அவளை மிகவும் வெட்கத்துடன் ஏற்றனர் அல்லவா?