Sriman Narayaneeyam - Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம் (ச்லோகம் 164)

Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம்

பீத்யாSலமங்கஜ வஸந்த ஸுராங்கநா: வோ மந்மாநஸம் த்விஹ ஜுஷத்வமிதி ப்ருவாண; த்வம் விஸ்மயேந பரித: ஸ்துவதாமதேஷாம் ப்ராதர்சய: ஸ்வபரிசாரக காதராக்ஷீ: பீத்யா அலம் அங்கஜ வஸந்த ஸுராங்கநா: வ: மத் மாநஸம் து இஹ ஜுஷத்வம் இதி ப்ருவாண; த்வம் விஸ்மயேந பரித: ஸ்துவதாம் அத ஏஷாம் ப்ராதர்சய: ஸ்வபரிசாரக காதராக்ஷீ: भीत्यालमङ्गज वसन्त सुराङ्गना वो मन्मानसं त्विह जुषुध्वमिति ब्रुवाणः । त्वं विस्मयेन परितः स्तुवतामथैषां प्रादर्शयः स्वपरिचारककातराक्षीः

குருவாயூரப்பா! (நாராயணனின் தவத்தைக் கலைத்த மன்மதன் முதலானோர், அவர் சபித்து விடுவாரோ என்று பயந்து நின்றனர்). நீ அவர்களை நோக்கி, மன்மதனே! வஸந்தமே! தேவப்பெண்களே! நீங்கள் அஞ்சவேண்டாம். என்னுடைய மனதில் இருந்து தோன்றும் இவர்களைக் கவனியுங்கள் என்றாய். இப்படிக் கூறிவிட்டு உன்னைச் சுற்றி உனக்குத் தொண்டு புரிய நிற்கும் அழகிய கண்கள் படைத்த பெண்களை நீ காண்பித்தாய்.