Sriman Narayaneeyam - Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம் (ச்லோகம் 163)
Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம்
காமோ வஸந்த மலயாநில பந்துசாலீ காந்தா கடாக்ஷ விசிகைர்விகஸத்விலாஸை: வித்யந் முஹுர்முஹுரகம்பமுதீக்ஷ்ய ச த்வாம் பீருஸ்த்வயாSத ஜகதே ம்ருது ஹாஸ பஜா காம: வஸந்த மலய அநில பந்துசாலீ காந்தா கடாக்ஷ விசிகை: விகஸத் விலாஸை: வித்யந் முஹு: முஹு: அகம்பம் உதீக்ஷ்ய ச த்வாம் பீரு: த்வயா அத ஜகதே ம்ருது ஹாஸ பஜா कामो वसन्तमलयानिलबन्धुशाली कान्ताकटाक्षविशिखैर्विकसद्विलासैः । विध्यन्मुहुर्मुहुरकम्पमुदीक्ष्य च त्वां भीतस्त्वायाथ जगदे मृदुहासभाजा
குருவாயூரப்பா! மன்மதன் தனது உறவினர்களான வஸந்த ருது மற்றும் மலயமாருதம் (தென்றல்) ஆகியோருடன் உன்னிடம் வந்தான். தேவப் பெண்களின் நடன அசைவுகளையும் கடைக்கண் பார்வைகளையும் உன்மீது அம்புகள் போன்று பலமுறை செய்தான். நீ அசையவே இல்லை. இதைக் கண்டு மனதில் பயம் கொண்டான். அப்போது மன்மதனைப் பார்த்து நீ புன்னகையுடன் பின்வருமாறு கூறினாய்.