Sriman Narayaneeyam - Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம் (ச்லோகம் 162)
Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம்
அந்வாசரந்நுபதிசந்நபி மோக்ஷ தர்மம் த்வம் ப்ராத்ருமாந் பதரிகாச்ரமமத்யவாத்ஸீ: சக்ரோSத தே சம தபோ பலநிஸ்ஸஹாத்மா திவ்யாங்கநா பரிவ்ருதம் ப்ரஜிகாய மாரம் அந்வாசரன் உபதிசந் அபி மோக்ஷ தர்மம் த்வம் ப்ராத்ருமாந் பதரிகாச்ரமம் அத்யவாத்ஸீ: சக்ர: அத தே சம தப: பல நிஸ்ஸஹ ஆத்மா திவ்யாங்கநா பரிவ்ருதம் ப்ரஜிகாய மாரம் अन्वाचरन्नुपदिशन्नपि मोक्षधर्मं त्वं भ्रातृमान् बदरिकाश्रममध्यवात्सीः । शक्रोऽथ ते शमतपोबलनिस्सहात्मा दिव्याङ्गनापरिवृतं प्रजिघाय मारम्
குருவாயூரப்பா! உனது சகோதரனான நரனுடன், நீ மோக்ஷ தர்மத்தைக் கைக்கொண்டும், அதனை உபதேசித்துக் கொண்டும் பதரிகாச்ரமத்தில் வாசம் செய்து வந்தாய். உனது தவ வலிமையையும் இந்த்ரிய கட்டுப்பாட்டையும் கண்டு பொறாமை கொண்ட இந்திரன், தேவமங்கையர் சூழ உன்னிடம் மன்மதனை அனுப்பினான் (உனது தவத்தைக் கலைக்க).