Sriman Narayaneeyam - Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம் (ச்லோகம் 161)

Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம்

தைத்யம் ஸஹஸ்ரகவசம் கவசை: பரீதம் ஸாஹஸ்ர வத்ஸர தபஸ்ஸமராபிலவ்யை: பர்யாய நிர்மித தபஸ்ஸமரௌ பவந்தௌ சிஷ்டைக கங்கடமமும் ந்யஹதாம் ஸலீலம் தைத்யம் ஸஹஸ்ர கவசம் கவசை: பரீதம் ஸாஹஸ்ர வத்ஸர தப: ஸமர அபிலவ்யை: பர்யாய நிர்மித தப: ஸமரௌ பவந்தௌ சிஷ்ட ஏக கங்கடம் அமும் ந்யஹதாம் ஸலீலம் दैत्यं सहस्रकवचं कवचैः परीतं साहस्रवत्सरतपस्समराभिलव्यैः । पर्यायनीर्मिततपस्समरौ भवन्तौ शिष्टैककङ्कटममुं न्यहतां सललिम्

குருவாயூரப்பா! நரநாராயணர்களாக அவதரித்த நீ, மாறி மாறி தவமும் யுத்தமும் ஆயிரம் வருடம் செய்தாய் (நரன் தவம் செய்யும்போது நாராயணன் யுத்தம் செய்வதும், நாராயணன் தவம் செய்யும்போது நரன் யுத்தம் செய்வதும் என நிலைமை இருந்தது). இது எதற்காக? ஆயிரம் கவசங்கள் கொண்ட ஸஹஸ்ரகவசன் என்ற அரக்கனை அழிக்கவே ஆகும். நீ செய்த ஆயிரம் வருட தவத்தால் ஒவ்வொரு கவசமாக அவிழ்ந்தது. இறுதியில் ஒரு கவசம் மட்டும் இருப்பவனாக அந்த அரக்கனை மாற்றி, அவனை ஒரு விளையாட்டாகவே நீ கொன்றாய்.