Sriman Narayaneeyam - Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம் (ச்லோகம் 160)
Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம்
மூர்த்திர்ஹி தர்மக்ருஹிணீ ஸுஷுவே பவந்தம் நாராயணம் நரஸகம் மஹிதாநுபாவம் யஜ்ஜந்மநி ப்ரமுதிதா: க்ருததூர்யகோஷா: புஷ்போத்கராந் ப்ரவவ்ருஷுர்நுநுவு: ஸுரௌகா: மூர்த்தி: ஹி தர்ம க்ருஹிணீ ஸுஷுவே பவந்தம் நாராயணம் நரஸகம் மஹித அநுபாவம் யத் ஜந்மநி ப்ரமுதிதா: க்ருத தூர்ய கோஷா: புஷ்ப உத்கராந் ப்ரவவ்ருஷு: நுநுவு: ஸுரௌகா: मूर्तिर्हि धर्मगृहिणी सुषुवे भवन्तं नारायणं नरसखं महितानुभावम् । यज्जन्मनि प्रमुदिताः कृततुर्यघोषाः पुष्पोत्करान्प्रववृषुर्नुनुवुः सुरौघाः
குருவாயூரப்பா! தக்ஷ ப்ரஜாதிபதியின் மகளான மூர்த்தி என்பவள் தர்மதேவதை மூலமாக, மஹிமை உடைய உன்னையும், உனது இரட்டையான நரன் என்ற தோழனையும் பெற்றாள் (இவர்களே நரநாராயணர்கள் ஆவர்) இதனைக் கண்டு மகிழ்ந்த தேவர்கள் மங்கல இசையை மீட்டி, மலர்களைத் தூவி உன்னை வரவேற்று வணங்கினர்.