Sriman Narayaneeyam - Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம் (ச்லோகம் 158)
Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம்
பரம கிமு பஹூக்த்யா த்வத் பாதாம்போஜ பக்திம் ஸகல பய விநேத்ரீம் ஸர்வகாமோபநேத்ரீம் வதஸி கலு த்ருடம் த்வம் தத்விதூயாமயாந் மே குருபவநபுரேச த்வய்யுபாதத்ஸ்வ பக்திம் பரம கிமு பஹூத்யா த்வத் பாதாம்போஜ பக்திம் ஸகல பய விநேத்ரீம் ஸர்வ காம உபநேத்ரீம் வதஸி கலு த்ருடம் த்வம் தத் விதூய ஆமயாந் மே குருபவநபுரேச த்வயி உபாதத்ஸ்வ பக்திம் परम ! किमु बहूक्त्या त्वत्पदाम्भोजभक्तिं सकलभयविनेत्रीं सर्वकामोपनेत्रीम् । वदसि खलु दृढं त्वं त्वद्विधूयामयान्मे गुरुपवनपुरेश ! त्वय्युपाधत्स्व भक्तिम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! குருவாயூரில் வசிப்பவனே! பரம்பொருளே! மேலும் மேலும் கூறுவதால் என்ன பயன்? உன்னுடைய தாமரைமலர் போன்ற திருவடிகளைப் பற்றுவதே, அதில் பக்தி வைப்பதே அனைத்து பயங்களையும் நீக்கும் என்றும், நமது விருப்பம் அனைத்தும் நிறைவேற்றும் என்றும் நீ உறுதியாகக் கூறுகிறாய் அல்லவா? என்னுடைய அனைத்து வ்யாதிகளையும் நீக்கி உன்னிடம் பக்தி கொண்டவனாக மாற்ற வேண்டும். இதற்கான அன்பை நீயே உருவாக்க வேண்டும்.***