Sriman Narayaneeyam - Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம் (ச்லோகம் 157)
Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம்
இதி ஸுவிதிதவேத்யாம் தேவ ஹே தேவஹூதிம் க்ருதநுதிமநுக்ருஹ்ய த்வம் கத: யோகி ஸங்கை: விமலமதிரதாSஸௌ பக்தியோகேந முக்தா த்வமபி ஜநஹிதார்த்தம் வர்த்தஸே ப்ராகுதீச்யாம் இதி ஸுவிதித வேத்யாம் தேவ ஹே தேவஹூதிம் க்ருதநுதிம் அநுக்ருஹ்ய த்வம் கத: யோகி ஸங்கை: விமல மதி: அத அஸௌ பக்தி யோகேந முக்தா த்வம் அபி ஜந ஹித அர்த்தம் வர்த்தஸே ப்ராக் உதீச்யாம் इति सुविदितवेद्यां देव ! हे देवहूतिं कृतनुतिमनुगृह्य त्वं गतो योगिसंघौ । विमलमतिरथाऽसौ भक्तियोगेन मुक्ता त्वमपि जनहितीर्थं वर्तसे प्रागुदीच्याम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக அறியவேண்டியவை அனைத்தையும் உனது தாயான தேவஹூதி நன்றாக அறிந்தாள். அவளுக்கு இப்படி அநுக்ரஹம் செய்த பின்னர் நீ ஸாதுக்களுடன் சென்றுவிட்டாய். தெளிவான ஞானம் பெற்ற தேவஹூதி, தன்னுடைய பக்தியோகத்தின் மூலம் முக்ட்தி பெற்றாள். நீ மக்களின் நன்மைக்காக வடகிழக்குத் திசையில் உள்ளாய் அல்லவா?