Sriman Narayaneeyam - Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம் (ச்லோகம் 156)

Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம்

பித்ரு ஸுர கணயாஜீ தார்மிகோ யோ க்ருஹஸ்த: ஸ ச நிபததி காலே தக்ஷிணாத்வோபகாமீ மயி நிஹிதமகாமம் கர்ம தூதக்பதார்த்தம் கபிலதரிதி த்வம் தேவஹூத்யை ந்யாகதீ பித்ரு ஸுர கண யாஜீ தார்மிக: ய: க்ருஹஸ்த: ஸ ச நிபததி காலே தக்ஷிண அத்வ உபகாமீ மயி நிஹிதம அகாமம் கர்ம து உதக் பதார்த்தம் கபில தநு: இதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: पितृसुरगणयाजी धार्मिको यो गृहस्थः स च निपतति काले दक्षिणाध्वोपगामी । मयि निहितमकामं कर्म तूदक्पथार्थे कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादीः

குருவாயூரப்பா! பித்ருக்களையும், தேவர்களையும் பூஜித்துக் கொண்டும், தனது தர்மங்களைச் செய்பவனும் என்றுள்ள க்ருஹஸ்தன் (இல்லறத்தில் உள்ளவன்) இறந்த பின்னர் தெற்குத் திசையில் சென்று விடுகிறான். அவன் செய்த புண்ணிய பலன்கள் தீர்ந்தவுடன் இந்தப் பூமியில் வந்து மீண்டும் பிறக்கிறான். ஆனால் என்னிடம் சமர்ப்பணம் என்று செய்யப்பட்ட விருப்பம் இல்லாத கர்மம் உடையவன் வடக்காகச் செல்கிறான் (அவன் மீண்டும் பிறப்பதில்லை) என்று நீ உபதேசித்தாய் அல்லவா?