Sriman Narayaneeyam - Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம் (ச்லோகம் 155)
Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம்
யுவதி ஜடரகிந்ந: ஜாதபோதோSப்யகாண்டே ப்ரஸவ களித போத: பீடயோல்லங்க்ய பால்யம் புநரபி பத முஹ்யத்யேவ தாருண்யகாலே கபிலதரிதி த்வம் தேவஹூத்யை ந்யாகதீ யுவதி ஜடரகிந்ந: ஜாத போத: அபி அகாண்டே ப்ரஸவ களித போத: பீடயா உல்லங்க்ய பால்யம் புந: அபி பத முஹ்யதி ஏவ தாருண்ய காலே கபில தநு: இதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: युवतिजठरखिन्नो जातबोधोऽप्यकाण्डे प्रसवगलितबोधः पीडयोल्लंङ्घ्य बाल्यम् । पुनरपि बत मुह्यत्येव तारुण्यकाले कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादीः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒருவன் தனது தாயின் கர்ப்பத்தில் உள்ளபோது மிகவும் சிரமப்படுகிறான். (ஆகாரங்களால் உண்டாகும் தொல்லைகள், அசுத்தமான மலமூத்ரங்களால் தொல்லைகள், கிருமிகளால் தொல்லை). அந்த ஜீவன் ஏழு மாதம் கழிந்த பின்னர் (கர்ப்பத்தில்) ஞானம் அடைகிறான். இருந்தாலும் தனது துயரங்களை நீக்கும் திறன் இல்லை. அவன் பிறந்தவுடன் இப்படிக் கிடைத்த ஞானத்தையும் இழந்து விடுகிறான். இதனால் தனது பால்யத்தில் பல துன்பங்களை அனுபவிக்கிறான். தனது வாலிபப் பருவத்தில் பலவிதமான மோகங்களால் பீடிக்கப்பட்டுத் தவிக்கிறான்! கஷ்டம்! என்று நீ உனது தாயான தேவஹூதிக்கு உபதேசித்தாய் அல்லவா?