Sriman Narayaneeyam - Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம் (ச்லோகம் 154)

Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம்

அஹஹ பஹுலஹிம்ஸாஸஞ்சிதார்த்தை: குடும்பம் ப்ரதிதிநமநுபுஷ்ணந் ஸத்ரீஜித: பாலலாலீ விசதி ஹி க்ருஹஸக்த: யாதநாம் மய்யபக்த: கபிலதரிதி த்வம் தேவஹூத்யை ந்யாகதீ அஹஹ பஹுல ஹிம்ஸா ஸஞ்சித அர்த்தை: குடும்பம் ப்ரதிதிநம் அநுபுஷ்ணந் ஸத்ரீஜித: பாலலாலீ விசதி ஹி க்ருஹஸக்த: யாதநாம் மயி அபக்த: கபில தநு: இதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: अहह ! बहुलहिंसासञ्चितार्थैः कुटुम्बं प्रतिदिनमनुपुष्णन् स्त्रीजितो बाललाली । विशति हि गृहसक्तो यातनां मय्यभक्तः कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादीः

குருவாயூரப்பா! அன்றாடம் பலவிதமானவர்களையும் துன்புறுத்தி, தானும் இம்சையை அனுபவித்து, பொருளை ஈட்டுகிறான். எதற்காக? தன்னுடைய குடும்பத்தைக் காப்பதற்காக ஆகும். இவன் பெண்களால் வெல்லப்பட்டவனாகவும், பிள்ளைகளை சீராட்டுபவனாகவும், தனது வீட்டின் மீது அதிகமான ஆசை உள்ளவனாகவும் இருக்கிறான். இதனால் இவனுக்கு என் மீது பக்தி இல்லாமல் போகிறது. இப்படிப்பட்டவன் நரகத்தையே அடைகிறான்! கஷ்டம்! கஷ்டம்! என்று நீ உனது தாயான தேவஹூதிக்கு உபதேசம் செய்தாய் அல்லவா?