Sriman Narayaneeyam - Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம் (ச்லோகம் 153)
Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம்
மம குண கண லீலாகர்ணநை: கீர்த்தநாத்யை: மயி ஸுரஸரிதோக ப்ரக்யசித்தாநுவ்ருத்தி: பவதி பரமபக்தி: ஸா ஹி ம்ருத்யோர்விஜேத்ரீ கபிலதரிதி த்வம் தேவஹூத்யை ந்யாகதீ மம குண கண லீலா ஆகர்ணநை: கீர்த்தந ஆத்யை: மயி ஸுர ஸரித் ஓக ப்ரக்ய சித்த அநுவ்ருத்தி: பவதி பரம பக்தி: ஸா ஹி ம்ருத்யோ: விஜேத்ரீ கபில தநு: இதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: मम गुणगुणलीलाकर्णनैः कीर्तिनाद्यैः मयि सुरसरिदोघप्रख्यचित्तानुवृत्तिः । भवति परमभक्तिस्साहि मृत्योर्विजेत्री कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादीः
குருவாயூரப்பா! பரம்பொருளான எனது திருக்கல்யாண குணங்களையும், எனது லீலைகள் அடங்கிய சரிதங்களையும், என்னுடைய திருநாமங்களையும் எப்போதும் த்யானித்து வந்தால் போதுமானது. அவை கங்கையின் வெள்ளம் தடைபடாமல் ஓடுவது போல் என்னிடம் தடையற்ற பக்தியை உண்டாக்கும். இந்த பக்தியானது யமனைக்கூட அருகில் வரமுடியாமல் தடுத்து நிறுத்த வல்லது என்று உனது தாயான தேவஹூத்யைக்கு உபதேசம் செய்தாய்.