Sriman Narayaneeyam - Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம் (ச்லோகம் 152)
Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம்
விமலமதிருபாத்தைராஸநாத்யைர்மதங்கம் கருட ஸமதிரூடம் திவ்ய பூஷாயுதாங்கம் ருசிதுலித தமாலம் சீலயேதாநுவேலம் கபிலதநுரிதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: விமல மதி: உபாத்தை: ஆசாந ஆத்யை: மத் அங்கம் கருட ஸமதிரூடம் திவ்ய பூஷா ஆயுத அங்கம் ருசி துலித தமாலம் சீலயேத் அநுவேலம் கபில தநு: இதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: विमलमतिरुपात्तैरासनाद्यैर्मदङ्गं गरुडसमधिरूढं दिव्यभूषायुधाङ्कम् । रुचितुलिततमालं शीलयेतानुवेलं कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादीः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! யோகம் மற்றும் ஆசனங்களைப் பயில்பவன், மனத்தெளிவு பெறுகிறான். அப்படிப்பட்டவன் என்னுடைய திருமேனியை, கருடன் மீது உள்ளதாகவும், பலவிதமான ஆபரணம் மற்றும் ஆயுதங்கள் கொண்டதாகவும், தமால மலர் போன்று நீல நிறம் உடையதாகவும், எப்போதும் த்யானித்தபடி இருக்கவேண்டும் என்று நீ, உனது தாயான தேவஹூதிக்கு உபதேசம் செய்தாய் அல்லவா?