Sriman Narayaneeyam - Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம் (ச்லோகம் 151)

Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம்

ப்ரக்ருதிகத குணௌகைர்நாஜ்யதே பூருஷோSயம் யதி து ஸஜதி தஸ்யாம் தத்குணாஸ்தம் பஜேரந் மதநுபஜநதத்வாலோசநை: ஸாSப்யபேயாத் கபிலதநுரிதி த்வம் தேவஹூத்யை ந்யாகதீ: ப்ரக்ருதி கத குண ஓகை: ந ஆஜ்யதே பூருஷ: அயம் யதி து ஸஜதி தஸ்யாம் தத் குணா: தம் பஜேரந் மத் அநுபஜந தத் ஆலோசநை: ஸா அபி அபேயாத் கபில தநு: இதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: प्रकृतिगतगुणौघैर्नाज्यते पूरुषोऽयं यदि तु सजति तस्यां तद्गुणास्तं भजेरन् । मदनुभजनतत्त्वालोचनैस्साप्यपेयात् कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादीः

குருவாயூரப்பா! பொதுவாக இந்த ஆத்மாவானது ப்ரக்ருதியின் குணங்களால் தொடப்படாததாகவே உள்ளது. ஆனால் பற்று உடையவனாக மாறும்போது உடல் முதலானவற்றின் குணங்கள் ஆத்மாவை பற்றிக் கொள்ளும். ஆனால் அவை என்னிடம் பக்தி செலுத்தி, வேதாந்தங்களை பாராயணம் செய்வதன் மூலம் அகன்றுவிடும். இப்படியாக, கபிலரான நீ உனது தாய்க்கு உபதேசம் செய்தாய் அல்லவா?