Sriman Narayaneeyam - Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம் (ச்லோகம் 150)

Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம்

ப்ரக்ருதி மஹதஹங்காராச்ச மாத்ராச்ச பூதாநீ அபி ஹ்ருதபி தசாக்ஷீ புருஷ: பஞ்சவிம்ச: இதி விதித விபாகோ முச்யதேSஸௌ ப்ரக்ருத்யா கபிலதநுரிதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: ப்ரக்ருதி மஹத் அஹங்காரா: ச மாத்ரா: ச பூதாநீ அபி ஹ்ருதபி தச ஆக்ஷீ புருஷ: பஞ்சவிம்ச: இதி விதித விபாக: முச்யதே அஸௌ ப்ரக்ருத்யா கபில தநு: இதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: प्रकृतिमहदहङ्काराश्च मात्राश्च भूता - न्यपि हृदपि दशाक्षी पूरुषः पञ्चविंशः । इति विदितविभागो मुच्यतेऽसौ प्रकृत्या कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादीः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ப்ரக்ருதி, அஹங்காரம் ஆகியவை; பஞ்ச பூதங்களின் காரணமான வாசனை, சுவை, உருவம், தொடு உணர்ச்சி மற்றும் ஓசை என்னும் தந்மாத்ரைகள்; பூமி, நீர், அக்னி, வாயு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்கள்; மனம், கண், காது, மூக்கு, நாக்கு, மெய் என்னும் ஐந்து ஞான இந்த்ரியங்கள்; பேச்சு, கை, கால், மர்மகுறிகள், மலமூத்திரக்குறிகள் என்னும் கர்ம இந்த்ரியங்கள் - ஆகிய இவற்றுடன் இணைந்த ஜீவன், இருபத்து ஐந்தாவது தத்துவமாகும். இப்படியாக இந்த வேறுபாடுகளை உணர்ந்த மனிதன், இந்தப் ப்ரக்ருதியின் பிடியில் உள்ள அறியாமையிலிருந்து விடுபடுகிறான் என்று கபிலரான நீ உனது தாய்க்கு உபதேசம் செய்தாய் அல்லவா?