Sriman Narayaneeyam - Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம் (ச்லோகம் 149)

Dasaka 15 - ஸ்ரீகபில உபதேசம்

மதிரிஹ குணஸக்தா பந்தக்ருத்தேஷ்வஸக்தா து அம்ருதக்ருதுபருந்தே பக்தியோகஸ்து ஸக்திம் மஹதநுகமலப்யா பக்திரேவாத்ர ஸாத்யா கபிலதநுரிதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: மதி: இஹ குண ஸக்தா பந்தக்ருத் தேஷு அஸக்தா து அம்ருத க்ருத் உபருந்தே பக்தியோகஸ்து ஸக்திம் மஹத் அநுகம லப்யா பக்தி: ஏவ அத்ர ஸாத்யா கபில தநு: இதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: मतिरिह गुणसक्ता बन्धकृत्तेष्वसक्ता त्वमृतकृदुपरुन्धे भक्तियोगस्तु सक्तिम् । महदनुगमलभ्या भक्तिरेवात्र साध्या कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादीः

குருவாயூரப்பா! மூன்று குணங்களையும் ஆதாரமாகக் கொண்டு விளங்கும் புத்தியானது (பொருள்கள் மீது பற்று உள்ள புத்தி) ஸம்ஸார பந்தத்தை உண்டாக்குகின்றது. ஆனால் பற்று நீக்கிய புத்தி என்பது உயர்ந்த மோட்சத்தை அளிக்க வல்லது. பற்று அற்ற புத்தியை உண்டாக்குவது என்பது பக்தியோகம் மூலமே ஆகும். பக்தியோகம் பற்றுதலை தடுத்து நிறுத்த வல்லது. மஹான்களைப் பின்பற்றுவதன் மூலம் பக்தியோகம் கிட்டுகிறது. இந்த பக்தியோகம் என்பது இந்த உலகில் மட்டுமே கிட்டக்கூடியது என்று இவ்வாறு கபிலராகத் தோன்றிய நீ உனது தாயான தேவஹுக்கு உபதேசித்தாய் அல்லவா? (விளக்கம் காண்க).

ஸ்ரீமத்பாகவதத்தின் மூன்றாம் ஸ்கந்தத்தின் 25 முதல் 33 முடிய உள்ள அத்யாயங்கள், இந்தத் தசகத்தில் கூறப்பட்டுள்ளன.