Sriman Narayaneeyam - Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம் (ச்லோகம் 148)

Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம்

வநமேயுஷி கர்தமே ப்ரஸந்நே மதஸர்வஸ்வமுபாதிசத் ஜநந்யை கபிலாத்மக வாயுமந்திரேச த்வரிதம் த்வம் பரிபாஹி மாம் கதௌகாத் வநம் ஏயுஷி கர்தமே ப்ரஸந்நே மத ஸர்வஸ்வம் உபாதிசந் ஜநந்யை கபில ஆத்மக வாயு மந்திர ஈச த்வரிதம் த்வம் பரிபாஹிமாம் கத ஔகாத் वनमेयुषि कर्दमे प्रसन्ने मतसर्वस्वमुपादिशञ्जनन्यै । कपिलात्मक वायुमदिरेशत्वरितं त्वं परिपाहि मां गदौघात्

குருவாயூரில் வாசம் செய்பவனே! குருவாயூரப்பா! தனது கடமைகளை முழுவதுமாக முடித்த பின்னர் கர்த்தமருக்குத் தெளிவான மனம் அமைந்தது. அதன் பின்னர் அவர் காட்டிற்குச் சென்றுவிட்டார். அதன் பின்னர் மதத்தின் தத்துவங்கள் அனைத்தையும் உனது தாயான தேவஹூதிக்கு நீ கபிலராகத் தோற்றம் கொண்டு உபதேசம் செய்தாய். இப்படிப்பட்ட நீ, என்னை பிணிகள் அண்டாமல் காப்பாற்ற வேண்டும்.***