Sriman Narayaneeyam - Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம் (ச்லோகம் 147)

Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம்

நிஜபர்த்ருகிரா பவந்நிவேஷா நிரதாயாமத தேவ தேவஹூத்யாம் கபிலஸ்த்வமஜாயதா ஜநாநாம் ப்ரதயிஷ்யந் பரமாத்ம தத்வ வித்யாம் நிஜ பர்த்ரு கிரா பவத் நிவேஷா நிரதாயாம் அத தேவ தேவஹூத்யாம் கபில: த்வம் அஜாயதா ஜநாநாம் ப்ரதயிஷ்யந் பரம ஆத்ம தத்வ வித்யாம் निजभर्तृगिरा भवन्निषेवा निरतायामथ देव देवहूत्याम् । कपिलस्त्वमजायथा जनानां प्रथयिष्यन्परमात्मतत्त्वविद्याम्

தேவர்களின் தேவனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படி தன்னுடைய கணவரின் வாக்கின்படி அவருக்கு இடைவிடாமல் தொண்டு புரிந்தாள் (தேவஹூதி). அவள் மூலமாகவே இந்த உலக மக்களுக்கு பரமார்த்த தத்துவத்தைக் குறித்த ஞானத்தை நீ உண்டாக்க விரும்பினாய். அதனால் நீ கபிலராகத் தோன்றினாய் அல்லவா!