Sriman Narayaneeyam - Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம் (ச்லோகம் 145)

Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம்

ஸ புநஸ்த்வதுபாஸன ப்ரபாவாத் தயிதா காம க்ருதே க்ருதே விமாநே வநிதா குல ஸங்குலோ நவாத்மா வ்யஹரத் தேவபதேஷு தேவஹூத்யா பதம்- ஸ புந: த்வத் உபாஸன ப்ரபாவாத் தயிதா காம க்ருதே க்ருதே விமாநே வநிதா குல ஸங்குல: நவ ஆத்மா வ்யஹரத் தேவபதேஷு தேவஹூத்யா स पुनस्त्वदुपासनप्रभावाद्दयिताकामकृते कृते विमाने । वनिताकुलसङ्कुलो नवात्मा व्यहरद्देवपथेषु देवहूत्या

குருவாயூரப்பா! உன்னை ஆராதனை செய்த காரணத்தால் அவருக்கு மிகுந்த யோகபலம் இருந்தது. இதனால் தனது மனைவியின் ஆசைக்கு ஏற்ப உண்டாக்கப்பட்ட விமானத்தில் அமர்ந்து, தேவப்பெண்கள் புடைசூழ, அந்த விமானத்தில் மனைவியுடன் பல இடங்களில் உற்சாமாகத் திரிந்தார்.