Sriman Narayaneeyam - Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம் (ச்லோகம் 143)

Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம்

ஸ மநு: சதரூபயா மஹிஷ்யா குணவத்யா ஸுதயா ச தேவஹூத்யா பவதீரித நாரதோபதிஷ்ட: ஸமகாத் கர்த்தமமாகதி ப்ரதீக்ஷம் ஸ மநு: சதரூபயா மஹிஷ்யா குணவத்யா ஸுதயா ச தேவஹூத்யா பவத் ஈரித நாரத உபதிஷ்ட: ஸமகாத் கர்த்தமம் ஆகதி ப்ரதீக்ஷம் स मनुश्शतरूपया महिष्या गुणवत्या सुतया च देवहूत्या । भवदीरितनारदोपदिष्टस्समगात् कर्दममागतिप्रतीक्षम्

குருவாயூரப்பா! மநுவானவன், நாரத முனிவரால் தூண்டப்பட்டான். (நாரதனை நீயே தூண்டினாய்). இவ்வாறு தூண்டப்பட்ட அவன் தனது மனைவியான சத்ரூபையுடன், நல்ல பண்புகள் நிறைந்தவளான தனது மகள் தேவஹூதி ஆகியோருடன், கர்த்தமரைச் சென்றடைந்தான்.