Sriman Narayaneeyam - Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம் (ச்லோகம் 142)

Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம்

ஸ்துவதே புலகாவ்ருதாய தஸ்மை மநுபுத்ரீம் தயிதாம் நவாபி புத்ரீ: கபிலம் ச ஸுதம் ஸ்வமேவ பச்சாத் ஸ்வகதிம் சாப்யநுக்ருஹ்ய நிர்கதோSபூ: ஸ்துவதே புலக ஆவ்ருதாய தஸ்மை மநுபுத்ரீம் தயிதாம் நவ அபி புத்ரீ: கபிலம் ச ஸுதம் ஸ்வமேவ பச்சாத் ஸ்வகதிம் ச அபி அநுக்ருஹ்ய நிர்கத: அபூ: स्तुवते पुलकावृताय तस्मै मनुपुत्रीं दयितां नवापि पुत्रीः । कपिलं च सुतं स्वमेव पश्चात् स्वगतिं चाप्यनुगृह्य निर्गतोऽभूः

குருவாயூரப்பா! உன்னுடைய தரிசனத்தின் மூலம் கர்த்தமர், மயிர்க்கூச்சல் அடைந்து நின்றார். அவருக்கு, மநுவின் (ப்ரும்மாவின் மகன்) மகளான தேவஹூதியை மனைவியாக அளித்தாய். அவர்களுக்கு ஒன்பது பெண்களை பிறக்க வைத்தாய் (அவர்கள் - கலை, அநஸூயை, ச்ரத்தை, ஹவிற்பூ, கதி, க்ரியை, கியாதி, அருந்ததி மற்றும் சாந்தி) மேலும், உனது அவதாரமான கபிலர் என்பவர் தோன்றுவார் எனவும் கூறினாய். அத்துடன் கர்த்தமர் முக்தியும் பெறுவார் என்றும் கூறினாய்.