Sriman Narayaneeyam - Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம் (ச்லோகம் 141)

Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம்

கருடோபரி காளமேக கம்ரம் விலஸத் கேளி ஸரோஜ பாணி பத்மம் ஹலிதோல்லஸிதாநநம் விபோ த்வம் வபுராவிஷ்குருஷே ஸ்ம கர்தமாய கருட உபரி காளமேக கம்ரம் விலஸத் கேளி ஸரோஜ பாணி பத்மம் ஹலித உல்லஸித ஆநநம் விபோ த்வம் வபு: ஆவிஷ்குருஷே ஸ்ம கர்தமாய गरुडोपरि कालमेघकम्रं विलसत्केलिसरोजपाणिपद्मम् । हसितोल्लसिताननं विभो ! त्वं वपुराविष्कुरुषे स्म कर्दमाय

குருவாயூரப்பா! ப்ரபுவே! அப்போது கர்த்தமருக்கு நீ காட்சி அளித்தாய். எப்படி? நீ கருடன் மீது அமர்ந்து இருந்தாய். உனது திருமேனியானது நீர் கொண்ட கருமேகம் போன்று அழகாக இருந்தது; உனது அழகிய திருக்கரங்களில் விளையாட்டிற்காக ஒரு தாமரை லரை வைத்திருந்தாய்; உன்னுடைய திருமுகத்தில் அழகான புன்சிரிப்பு காணப்பட்டது. இப்படியாக நீ கர்த்தமருக்குத் தோன்றினாய் அல்லவா!