Sriman Narayaneeyam - Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம் (ச்லோகம் 140)
Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம்
ஸமயே கலு தத்ர கர்த்தமாக்யோ த்ருஹிணச்சாய பவஸ்ததீய வாசா த்ருத ஸர்கரஸோ நிஸர்க ரம்யம் பகவம்ஸ்த்வாமயுதம் ஸமா: நிஷேவே ஸமயே கலு தத்ர கர்த்தம் ஆக்ய: த்ருஹிண ச்சாய பவ: ததீய வாசா த்ருத ஸர்க ரஸ: நிஸர்க ரம்யம் பகவந் த்வாம் அயுதம் ஸமா: நிஷேவே समये खलु तत्र कर्दमाख्यो द्रुहिणच्छायभवस्तदीयवाचा । धृतसर्गरसो निसर्गरम्यं भगवंस्त्वामयुतं समास्सिषेवे
பகவானே! குருவாயூரப்பா! மந்வந்தர காலத்தில், ப்ரும்மாவின் நிழலில் இருந்து உதித்தவர் கர்த்தமர் என்பவர் ஆவார். அவர் ப்ரும்மாவின் “ஸ்ருஷ்டி செய்யவேண்டும்” என்ற கட்டளையை ஏற்று, ஸ்ருஷ்டியில் விருப்பம் கொண்டார். க்ருஷ்ணா! இயற்கையாகவே அழகு கொண்ட உன்னைக் குறித்து பதினாயிரம் ஆண்டு மிகவும் கடுமையாக தவம் புரிந்தார்.