Sriman Narayaneeyam - Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம் (ச்லோகம் 139)

Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம்

ஸமநுஸ்ம்ருத தாவகாங்க்ரியுக்ம: ஸ மநு: பங்கஜ ஸம்பவாங்க ஜந்மா நிஜமந்தரமந்தராயஹீநம் சரிதம் தே கதயந் ஸுகம் நிநாய ஸமநுஸ்ம்ருத தாவக அங்க்ரி யுக்ம: ஸ மநு: பங்கஜ ஸம்பவ அங்க ஜந்மா நிஜம் அந்தரம் அந்தராய ஹீநம் சரிதம் தே கதயந் ஸுகம் நிநாய समनुस्मृततावकाङ्घ्रियुग्मः स मनुः पङ्कजसम्भवाङ्गजन्मा । निजमन्तरमन्तरायहीनं चरितं ते कथयन् सुखं निनाय

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தாமரையில் உதித்த ப்ரும்மாவின் மகனான அந்த மநு, உன்னுடைய திருவடிகளை எப்போதும் த்யானம் செய்து கொண்டும், உன்னுடைய லீலைகள் அடங்கிய சரிதங்களைச் சொல்லிக் கொண்டும், தன்னுடைய காலமான மந்வந்த்ரத்தை எந்தவிதமான தடைகளும் இல்லாமல், இனிமையாகக் கழித்தான் (விளக்கம் காண்க).

ஸ்ரீமத்பாகவதத்தின் மூன்றாம் ஸ்கந்தத்தின் 21 முதல் 24 முடிய உள்ள அத்யாயங்கள், இந்தத் தசகத்தில் கூறப்பட்டுள்ளன.