Sriman Narayaneeyam - Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம் (ச்லோகம் 138)
Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம்
முநீந்த்ரைரித்யாதிஸ்தவத முகரைர்மோதிதமனா: மஹீயஸ்யா மூர்த்யா விமலதர கீர்த்யா ச விலஸந் ஸ்வதிஷ்ண்யம் ஸம்ப்ராப்த: ஸுகரஸ விகாரீ மதுரிபோ நிருந்த்யா ரோகம் மே ஸகலமபி வாதாலய பதே முநீந்த்ரை: இத்யாதி ஸ்தவத முகரை: மோதித மனா: மஹீயஸ்யா மூர்த்யா விமலதர கீர்த்யா ச விலஸந் ஸ்வதிஷ்ண்யம் ஸம்ப்ராப்த: ஸுக ரஸ விகாரீ மதுரிபோ நிருந்த்யா ரோகம் மே ஸகலம் அபி வாதாலய பதே मुनीन्द्रैरित्यादिस्तवनमुखरैर्मोदितमना महीयस्या मूर्त्या विमलतरकीर्त्या च विलसन् । स्वधिष्ण्यं संप्राप्तस्सुखरसविहारी मधुरिपो निरुन्ध्या रोगं मे सकलमपि वातालयपते
மது என்ற அசுரனைக் கொன்றவனே! குருவாயூரின் பதியே! க்ருஷ்ணா! இப்படியாக முனிவர்கள் உன்னைத் துதித்தபோது நீ மனம் மகிழ்ந்தாய். மிகவும் பெரிய உருவத்துடனும், அளவிட இயலாத தூய்மையான புகழோடும் விளங்கிய நீ, உன்னுடைய இருப்பிடமான ஸ்ரீவைகுண்டம் அடைந்தாய். அங்கு பரமானந்தத்தில் திளைக்கும் நீ, என்னுடைய அனைத்து பிணிகளையும் நீக்க வேண்டும்.***