Sriman Narayaneeyam - Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம் (ச்லோகம் 137)

Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம்

த்வசி சந்தோ ரோமஸ்வபி குசகணச்சக்ஷுஷி க்ருதம் சதுர்ஹோதரோSங்க்ரௌ ஸ்ருகபி வதனே சோதர இடா க்ரஹா ஜிஹ்வாயாம் தே பரபுருஷ கர்ணே ச சமஸ: விபோ ஸோம: வீர்யம் வரத கலதேசோSப்யுபஸத: த்வசி சந்த: ரோமஸு அபி குசகண: சக்ஷுஷி க்ருதம் சதுர்ஹோதர: அங்க்ரௌ ஸ்ருக் அபி வதனே ச உதர இடா க்ரஹா ஜிஹ்வாயாம் தே பரபுருஷ கர்ணே ச சமஸ: விபோ ஸோம: வீர்யம் வரத கலதேச ச அபி உபஸத: त्वचि छन्दो रोमस्वपि कुशगणश्चक्षुषि घृतं चतुर्होतारोऽघ्रौ स्रुगपि वदने चोदर इडा । ग्रहा जिह्वायां ते परपुरुष कर्णे च चमसा विभो ! सोमो वीर्यं वरद ! गळदेशेऽप्युपसदः

பரமபுருஷனே! வரங்கள் அளிப்பவனே! குருவாயூரப்பா! உன்னுடைய தோலில் காயத்ரி போன்ற சந்தங்கள்; ரோமங்களில் தர்ப்பைகள்: கண்களில் நெய்: கால்களில் நான்கு ரித்விக்குகள் (ப்ரம்மா, ஹோதா, உத்காதா, அத்வர்யு); முகத்தில் ஸ்ருக் என்னும் ஹோமபாத்திரம்; வயிற்றில் இடா என்னும் ஹோம பாத்திரம்; நாக்கில் க்ரஹம் என்ற பாத்திரம்; காதுகளில் ஸமஸம் என்ற தட்டுகளும் விந்துவில் ஸோமரஸம்; கழுத்தில் உபஸத்துகள் என்னும் இஷ்டி மந்திரங்கள் உள்ளன. ஆக பகவானின் திருமேனி வேதமயமானது என்று வர்ணிக்கின்றார்.