Sriman Narayaneeyam - Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம் (ச்லோகம் 136)
Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம்
மஹாகாய: ஸோSயம் தவ சரணபாத ப்ரமதித: கலத்ரக்தோ வக்த்ராதபதத் ரிஷிபி: ச்லாகிதஹதி: ததா த்வாமுத்தாம ப்ரமதபர வித்யோதி ஹ்ருதயா: முநீந்த்ரா: ஸாந்த்ராபி: ஸ்துதிபிரநுவந்நத்வரதநும் மஹாகாய: ஸ: அயம் தவ சரண பாத ப்ரமதித: கலத் ரக்த: வக்த்ராத் அபதத் ரிஷிபி: ச்லாகித ஹதி: ததா த்வாம் உத்தாம ப்ரமதபர வித்யோதி ஹ்ருதயா: முநீந்த்ரா: ஸாந்த்ராபி: ஸ்துதிபி: அநுவந் அத்வர தநும் महाकायस्सोऽयं तव करसरोजप्रमथितो गळद्रक्तो वक्त्रादपतदृषिभिः श्लाघितहतिः । तदा त्वामुद्दामप्रमदभरविद्योतिहृदयाः मुनीन्द्रास्सान्द्राभिः स्तुतिभिरनुवन्नध्वरतनुम्
குருவாயூரப்பா! மிகவும் பருத்த உடலை உடைய அந்த இரண்யாக்ஷன் உன்னுடைய தாமரைமலர் போன்று சிவந்தும் அழகாகவும் உள்ள திருவடிகளால் தாக்கப்பட்டவுடன், அவன் முகத்தில் இருந்து இரத்தம் வழிந்தது. உடனே முனிவர்களால் புகழப்பட்டு கீழே விழுந்து மடிந்தான். அதே நேரம், முனிவர்கள் ஆனந்தம் அடைந்தவர்களாக மிகுந்த ஓசையுடன் கூடிய ஸ்தோத்திரங்கள் மூலம் வராஹனான உன்னைத் துதித்தனர்.