Sriman Narayaneeyam - Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம் (ச்லோகம் 135)
Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம்
பவச்சக்ர ஜ்யோதிஷ்கண லவ நிபாதேந விதுதே தத: மாயாசக்ரே விதத கநரோஷாந்த மநஸம் கரிஷ்டாபிர்முஷ்டி ப்ரஹ்ருதிபிரபிக்நந்தமஸுரம் ஸ்வபாதாங்குஷ்டேந ச்ரவண பதமூலே நிரவதீ: பவத் சக்ர ஜ்யோதிஷ கண லவ நிபாதேந விதுதே தத: மாயா சக்ரே விதத கந ரோஷ அந்த மநஸம் கரிஷ்டாபி: முஷ்டி ப்ரஹ்ருதிபி: அபிக்நந்தம் அஸுரம் ஸ்வ பாத அங்குஷ்டேந ச்ரவண பத மூலே நிரவதீ: भवच्चक्रज्योतिष्कणलवनिपातेन विधुते ततो मायाचक्रे विततघनरोषान्धमनसम् । गरिष्ठाभिर्मुष्टिप्रहृतिभिरभिघ्नन्तमसुरं स्वपादाङ्गुष्ठेन श्रवणपदमूले निरवधीः
குருவாயூரப்பா! அந்த அசுரன் உன் மீது ஏவிய மாயைகள் அனைத்தும் உனது சக்ர ஆயுதத்தின் முன் தோன்றிய ஜோதியில் அழிந்தன. இதனால் மேலும் கோபம் கொண்ட அவன் அடுத்து என்ன செய்வது என்று குழம்பினான். தனது பெரிய முஷ்டிகளால் உன்னைக் குத்தினான். உடனே நீ உனது பெரிய திருவடியின் நுனிப் பாகத்தால் அவனுடைய காதில் அடித்து, அவனை வீழ்த்தினாய் அல்லவா?