Sriman Narayaneeyam - Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம் (ச்லோகம் 134)

Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம்

தத: சூலம் காலப்ரதிமருஷி தைத்யே விஸ்ருஜதி த்வயி சிந்தத்யேநத் கரகலித சக்ர ப்ரஹரணாத் ஸமாருஷ்ட: முஷ்ட்யா ஸ கலு விதுதம்ஸ்த்வாம் ஸமதநோத் கலந்மாயே மாயாஸ்த்வயி கில ஜகந்மோஹனகரீ: தத: சூலம் காலப்ரதிம் அருஷி தைத்யே விஸ்ருஜதி த்வயி சிந்ததி ஏநத் கர கலித சக்ர ப்ரஹரணாத் ஸமாருஷ்ட: முஷ்ட்யா ஸ கலு விதுதந் த்வாம் ஸமதநோத் கலந்மாயே மாயா: த்வயி கில ஜகந் மோஹனகரீ: ततः शूलं कालप्रतिमरुषि दैत्ये विसृजति त्वयि छिन्दत्येनत् करकलितचक्रप्रहरणात् । समारुष्टो मुष्ट्या स खलु वितुदंस्त्वां समतनोत् गळन्माये मायास्त्वयि किल जगन्मोहनकरीः

குருவாயூரப்பா! அதன் பின்னர் அந்த அசுரன் யமனுக்கு ஒப்பான கோபத்தைக் கொண்டவனாகத் தன்னுடைய சூலத்தை உன் மீது ஏவினான். நீ அந்த சூலத்தை முறித்தபோது அவன் மிகுந்த கோபம் கொண்டான். அப்போது உன்னைத் தனது கைமுட்டியால் அடித்தான். அதன் பின்னர் மாயைகளே நெருங்க இயலாத உன்னிடம் மாயைகளை ஏவினான் அல்லவா?