Sriman Narayaneeyam - Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம் (ச்லோகம் 133)

Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம்

கதோந்மர்தே தஸ்மிம்ஸ்தவ கலு கதாயாம் திதிபுவ: கதாகாதாத் பூமௌ ஜடிதி பதிதாயாமஹஹ போ: ம்ருதுஸ்மேராஸ்யஸ்த்வம் தநுஜகுல நிர்மூலநசணம் மஹா சக்ரம் ஸ்ம்ருத்வா கரபுவி ததாந: ருருசிஷே கதோந்மர்தே தஸ்மிந் தவ கலு கதாயாம் திதிபுவ: கதா காதாத் பூமௌ ஜடிதி பதிதாயாம் அஹஹ போ: ம்ருதுஸ்மேர ஆஸ்ய: த்வம் தநுஜகுல நிர்மூலநசணம் மஹா சக்ரம் ஸ்ம்ருத்வா கரபுவி ததாந: ருருசிஷே गदोन्मर्दे तस्मिंस्तव खलु गदायां दितिभुवो गदाघाताद्भूमौ झटिति पतितायामहह ! भोः ! । मृदुस्मेरास्यस्त्वं दनुजकुलनिर्मूलनचणं महाचक्रं स्मृत्वा करभुवि दधानो रुरुचिषे

பிரபுவே! குருவாயூரப்பபா! இப்படியாக நடந்த சண்டையில் இரண்யாக்ஷனின் கதையால் அடிக்கப்பட்ட உனது கதை கீழே விழுந்தது. என்ன வியப்பு! (இப்படி கதை விழுந்ததும் பகவானின் விளையாட்டே ஆகும். வைகுண்டத்தின் வாயிற்காப்போனாக விளங்கியவனே இரண்யாக்ஷன் என்பதை நாம் முன்னர் பார்த்தோம். தன்னுடைய பக்தன் அவன்! அவன் ஒருமுறையாவது ஜெயிக்கட்டும் என்று பகவான் தனது கதையை நழுவவிட்டான்). அப்போது நீ அழகான புன்னகை பூத்த முகத்துடன், அசுரர்களின் குலத்தையே அழிக்கும் திறன் படைத்த சக்கர ஆயுதத்தை நினைத்து, அவனை வரவழைத்து, அவனை உனது வலது திருக்கரத்தில் ஏந்தினாய் அல்லவா?