Sriman Narayaneeyam - Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம் (ச்லோகம் 132)
Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம்
கதாபாணௌ தைத்யே த்வமபி க்ருஹீதோந்நத கத: நியுத்தேந க்ரீடந் கடகட ரவோத்குஷ்ட வியதா ரணாலோகௌத்ஸுக்யாந்மிலதி ஸுரஸங்கே த்ருதமமும் ந்ருந்த்யா: ஸந்த்யாத: ப்ரதமமிதி தாத்ரா ஜகதிஷே கதாபாணௌ தைத்யே த்வம் அபி க்ருஹீத உந்நத கத: நியுத்தேந க்ரீடந் கட கட ரவ உத்குஷ்ட வியதா ரண அலோக ஔத்ஸுக்யாத் மிலதி ஸுரஸங்கே த்ருதம் அமும் ந்ருந்த்யா: ஸந்த்யாத: ப்ரதமம் இதி தாத்ரா ஜகதிஷே गदापाणौ दैत्ये त्वमपि हि गृहीतोन्नतगदो नियुद्धेन क्रीडन् घटघटरवोद्घुष्टवियता । रणालोकैत्सुक्यान्मिळति सुरसंघे द्रुतममुं निरुन्ध्यास्सन्ध्यातः प्रथममिति धात्रा जगदिषे
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த அசுரன் தனது கைகளில் கதை ஆயுதம் வைத்திருந்ததைப் பார்த்த நீயும் மிகவும் பெரியதான கதையைக் கொண்டாய். நீயும் அவனும் யுத்தம் செய்தபோது உண்டான “கட கட” என்று சத்தம் விண்ணையே அதிரச் செய்தது. நீ விளையாட்டாகவே யுத்தம் செய்ததைக் கண்டு ரசிக்க, தேவர்கள் அங்கு கூடினர். அந்த நேரம் ப்ரும்மா உன்னிடம், “இவனை ஸ்ந்த்யா காலத்திற்கு முன்பே கொல்ல வேண்டும்”, என்று நினைவுபடுத்தினான் அல்லவா? (இதன் காரணம் ஸ்ந்த்யா காலத்திற்குப் பின் அசுர பலம் அதிகரிக்கும் என்பதால் ஆகும்).