Sriman Narayaneeyam - Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம் (ச்லோகம் 131)

Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம்

அஹோ ஆரண்யோSயம் ம்ருக இதி ஹஸந்தம் பஹுதரை: துருக்தைர்வித்யந்தம் திதிஸுதமவஜ்ஞாய பகவந் மஹீம் த்ருஷ்ட்வா தம்ஷ்ட்ராசிரஸி சகிதாம் ஸ்வேந மஹஸா பயாதாவாதாய ப்ரஸபமுதயுங்க்தா ம்ருதவிதௌ அஹோ ஆரண்ய: அயம் ம்ருக இதி ஹஸந்தம் பஹுதரை: துருக்தை: வித்யந்தம் திதிஸுதம் அவஜ்ஞாய பகவந் மஹீம் த்ருஷ்ட்வா தம்ஷ்ட்ராசிரஸி சகிதாம் ஸ்வேந மஹஸா பயாதௌ ஆதாய ப்ரஸபம் உதயுங்க்தா ம்ருதவிதௌ अहो आरण्योऽयं मृग इति हसन्तं बहुतरै - र्दुरुक्तैर्विध्यन्तं दितिसुतमवज्ञाय भगवन् । महीं दृष्ट्वा दंष्ट्राशिरसि चकितां स्वेन महसा पयोधावाधाय प्रसभमुदयुङ्था मृधविधौ

பகவானே! குருவாயூரப்பா! உன்னைக் கண்ட அந்த அசுரன், “இது என்ன காட்டில் இருக்க வேண்டிய விலங்கா?”, என்று பரிகாசம் செய்து நகைத்தான். உன்னைப் பலவிதமான தீய சொற்களால் திட்டினான். திதியின் மகனான அவனை நீ பொருட்படுத்தாமல், உனது பல்லில் இருந்தபடியே இதனைக் கண்டு பயந்து நடுங்கிய பூதேவியை, உன்னுடைய சக்தியால் நீரின் மீது மூழ்காமல் நிலையாக இருக்கும்படி நிறுத்தினாய். அதன் பின்னர் அவனுடன் யுத்தம் செய்ய தயாராக இருந்தாய் அல்லவா?