Sriman Narayaneeyam - Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம் (ச்லோகம் 130)

Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம்

ஸ மாயாவீ விஷ்ணுர்ஹரதி பவதீயாம் வஸுமதீம் ப்ரபோ கஷ்டம் கஷ்டம் கிமிதமிதி தேநாபிகதித: நதந் க்வாஸௌ க்வாஸவிதி ஸ முநிநா தர்சிதபத: பவந்தம் ஸம்ப்ராபத் தரணிதரமுத்யந்தம் உதகாத் ஸ மாயாவீ விஷ்ணு: ஹரதி பவதீயாம் வஸுமதீம் ப்ரபோ கஷ்டம் கஷ்டம் கிம் இதம் தேந: அபிகதித: நதந் க்வ அஸௌ க்வ அஸௌ இதி ஸ முநிநா தர்சிதபத: பவந்தம் ஸம்ப்ராபத் தரணி தரம் உத்யந்தம் உதகாத் स मायावी विष्णुर्हरति भवदीयं वसुमतीं प्रभो ! कष्टं कष्टं किमिदमिति तेनाभिगदितः । नदन् क्वासौ क्वासाविति स मुनिना दर्शितपथो भवन्तं संप्रापद्धरणिधरमुद्यन्तमुदकात्

குருவாயூரப்பா! நாரதர் இரண்யாக்ஷனிடம், “மாயாவியான விஷ்ணு நீ வைத்திருந்த பூமியை, உன்னிடமிருந்து அபகரித்துச் செல்கிறான். கஷ்டம்! கஷ்டம்!”, என்று கூறினார். இதனைக் கேட்ட இரண்யாக்ஷன், “அந்த விஷ்ணு எங்கே! அந்த விஷ்ணு எங்கே!”, என்று சப்தம் எழுப்பிக் கொண்டு வந்தான். பின்னர் நாரத முனிவரால் காண்பிக்கப்பட்ட பாதையில் வந்து, பூமியை தூக்கிக் கொண்டு நிற்கின்றவனும், ஸமுத்திரத்தில் இருந்து வெளியில் வந்தவனும் ஆகிய உன்னிடம் வந்தான் அல்லவா?