Sriman Narayaneeyam - Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம் (ச்லோகம் 129)

Dasaka 13 - ஹிரண்யாக்ஷ வதம்

ஹிரண்யாக்ஷம் தாவத் வரத பவதந்வேஷணபரம் சரந்தம் ஸாம்வர்த்தே பயஸி நிஜ ஜங்கா பரிமிதே பவத்பக்தோ கத்வா கபடபடுதீர்நாரதமுநி: சனைரூசே நந்தந் தநுஜமபி நிந்தந்ஸ்தவ பலம் ஹிரண்யாக்ஷம் தாவத் வரத பவத் அந்வேஷணபரம் சரந்தம் ஸாம்வர்த்தே பயஸி நிஜ ஜங்கா பரிமிதே பவத் பக்தோ கத்வா கபடபடுதீ: நாரதமுநி: சனை: ஊசே நந்தந் தநுஜம் அபி நிந்தந் தவ பலம் हिरण्याक्षं तावद्वरद ! भवदन्वेषणपरं चरन्तं सांवर्ते पयसि निजजङ्घापरिमिते । भवद्भक्तो गत्वा कपटपटुधीर्नारदमुनिः शनैरूचे नन्दन् दनुजमपि निन्दंस्तव बलम्

வரங்களை அளிக்கும் குருவாயூரப்பா! இப்படியாக நீ பூமியை மீட்டு வந்த பின்னர், ப்ரளய ஜலத்தில் உன்னை இரண்யாக்ஷன் தேடினான். அந்த நீர் அவனுக்கு முழங்கால் அளவே இருந்தது. அப்போது அவனிடம் சென்ற நாரதர் அவனைப் பாராட்டியும், உனது பலத்தை இகழ்வாகவும் கூறினார் அல்லவா? (இங்கு நாரதரை பட்டத்ரி எப்படி வர்ணிக்கிறார்?) உன்னுடைய பக்தனும், கபடமாக பேசி மனதை மயக்குவதில் வல்லவரும் ஆகிய நாரதர் என்று கூறுகிறார். பகவான் பலத்தை நாரதர் குறைவாகக் கூறவேண்டிய காரணம் என்ன? அப்படிக் கூறினால் மட்டுமே தனது சொல்லை இரண்யாக்ஷன் கேட்பான் என்ற காரணத்தினால் ஆகும் (விளக்கம் காண்க).

ஸ்ரீமத்பாகவதத்தின் மூன்றாம் ஸ்கந்தத்தின் 18, 19 ஆம் அத்யாயங்கள், இந்த தசகத்தில் கூறப்பட்டுள்ளது.