Sriman Narayaneeyam - Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம் (ச்லோகம் 128)
Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம்
அப்யுத்தரந்நத தராம் தசநாக்ரலக்ந முஸ்தாங்குராங்கித இவாதிகபீவராத்மா உத்தூத கோரஸலிலாஜ்ஜலதே: உதஞ்சந் க்ரீடா வராஹ வபுரீச்வர: பாஹி ரோகாத் அப்யுத்தரந் அத தராம் தசந அக்ர லக்ந முஸ்த அங்குர அங்கித இவ அதிக பீவர ஆத்மா உத்தூத கோர ஸலிலாத் ஜலதே: உதஞ்சந் க்ரீடா வராஹ வபு: ஈச்வர: பாஹி ரோகாத் अभ्युद्धरन्नथ धरां दशनाग्रलग्न - मुस्ताङ्कुराङ्कित इवाधिकपीवरात्मा । उद्धातघोरसलिलाज्जलधेरुदञ्चन् क्तीडावराहवपुरीश्वर ! पाहि रोगात्
உனது விருப்பத்தினால் வராஹ உருவம் எடுத்த குருவாயூரப்பா! கோரைப் பற்களின் நுனியில் கிழங்கு போன்று பூமியைக் கொண்டவனும், மிகவும் பெரிய உடலைக் கொண்டவனும், கலங்கியதும் பெரிய அலைகள் வீசுவதும் ஆகிய ஸமுத்திரத்தில் இருந்து வெளிவந்தவனும் ஆகிய நீ, என்னைப் பிணிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.***