Sriman Narayaneeyam - Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம் (ச்லோகம் 127)

Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம்

த்ருஷ்ட்வாSத தைத்ய ஹதகேந ரஸாதலாந்தே ஸம்வேசிதாம் ஜடிதி கூடகிடிர்விபோ த்வம் ஆபாதுகாநவிகணய்ய ஸுராரிகேடாந் தம்ஷ்ட்ராங்குரேண வஸுதாமததா: ஸலீலம் த்ருஷ்ட்வா அத தைத்ய ஹதகேந ரஸாதல அந்தே ஸம்வேசிதாம் ஜடிதி கூட கிடி: விபோ த்வம் ஆபாதுகாந் அவிகணய்ய ஸுராரி கேடாந் தம்ஷ்ட்ர அங்குரேண வஸுதாம் அததா: ஸலீலம் दृष्ट्वाऽथ दैत्यहतकेन रसातलान्ते संवेशितां झटिति कूटकिटिर्विभो ! त्वम् । आपातुकानविगणय्य सुरारिखेटान् दंष्ट्राङ्कुरेण वसुधामदधास्सलीलम्

எங்கும் நிறைந்த குருவாயூரப்பா! அதன் பின்னர், மிகக்கொடிய அசுரனாகிய ஹிரண்யாக்ஷனால் ரஸாதலத்தின் நடுவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பூமியை நீ கண்டாய். வராஹமூர்த்தியான நீ, உன்னை எதிர்த்து வரும் அசுரர்களைக் கண்டு, அவர்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல், உனது கோரைப்பற்களால் பூமியை, விளையாடுவது போன்று (அலட்சியமாக) குத்தி எடுத்தாய் அல்லவா?