Sriman Narayaneeyam - Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம் (ச்லோகம் 126)

Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம்

அந்தர்ஜலம் ததநு ஸங்குல நக்ர சக்ரம் ப்ராம்யத் திமிங்கல குலம் கலுஷோர்மிமாலம் ஆவிச்ய பீஷணரவேண ரஸாதலஸ்தாந் ஆகம்பயந் வஸுமதீமகவேஷயஸ்த்வம் அந்தர்ஜலம் ததநு ஸங்குல நக்ர சக்ரம் ப்ராம்யத் திமிங்கல குலம் கலுஷ ஊர்மி மாலம் ஆவிச்ய பீஷண ரவேண ரஸாதலஸ்தாந் ஆகம்பயந் வஸுமதீம் அகவேஷய: த்வம் अन्तर्जलं तदनु संकुलनक्रचक्रं भ्राम्यत्तिमिङ्गिलकुलं कलुषोर्मिमालम् । आविश्य भीषणरवेण रसातलस्था - नाकम्पयन् वसुमतीमगवेषयस्त्वम्

குருவாயூரப்பா! நீ இறங்கிய ஸமுத்ரம் எப்படி இருந்தது? முதலைக் கூட்டங்கள் நிரம்பியதும், எங்கும் சுற்றுகின்ற திமிங்கலக் கூட்டம் உடையதாகவும், மிகப் பெரிய அலைகள் உடையதாகவும், கலங்கியதாகவும் இருந்தது. நீ உள்ளே சென்று எழுப்பிய கர்ஜனையால் ரஸாதல லோகம் கூட நடுங்கியது. இப்படியாகச் சென்று நீ பூதேவியைத் தேடினாய் அல்லவா?