Sriman Narayaneeyam - Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம் (ச்லோகம் 125)
Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம்
ஊர்த்த்வ ப்ரஸாரி பரிதூம்ர விதூதரோமா ப்ரோத்க்ஷிப்த வாலதிரவாங்முக கோர கோண: தூர்ண ப்ரதீர்ண ஜலத: பரிகூர்ணதக்ஷ்ணா ஸ்தோத்ரூந் முநீந் சிசிரயந்நவதேரித த்வம் ஊர்த்த்வ ப்ரஸாரி பரிதூம்ர விதூத ரோமா ப்ரோத்க்ஷிப்த வாலதி: அவாங் முக கோர கோண: தூர்ண ப்ரதீர்ண ஜலத: பரிகூர்ணத் அக்ஷ்ணா ஸ்தோத்ரூந் முநீந் சிசிரயந் அவதேரித த்வம் ऊर्ध्वप्रसारिपरिधूम्राविधूतरोमा प्रोत्क्षिप्तवालधिरवाङ्मुखघोरघोणः । तूर्णप्रदीर्णजलदः परिघूर्णदक्ष्णा स्तोतन् मुनीन् शिशिरयन्नवतेरिथ त्वम्
குருவாயூரப்பா! நீ அப்போது எப்படி இருந்தாய்? உனது ரோமங்கள் மேல் நோக்கியும், கறுப்பும் சிவப்புமாகவும், அசையும்படியும் இருந்தன. உனது வால் உயரமாகத் தூக்கி இருந்தது. உனது மூக்கு கீழாக நோக்கியபடி பயங்கரமான தோற்றத்துடன் காணப்பட்டது. மேகக்கூட்டத்தை நீ பிளந்தாய். உன்னைத் துதித்துக் கொண்டிருந்த முனிவர்களை உனது திருக்கண் பார்வையால் குளிரச்செய்து ஸமுத்திரத்தில் இறக்கினாய் அல்லவா?