Sriman Narayaneeyam - Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம் (ச்லோகம் 123)

Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம்

கோSஸாவாசிந்த்ய மஹிமா கிடிருத்திதோ மே நாஸாபுடாத் கிமு பவேதஜிதஸ்ய மாயா இத்தம் விசிந்தயதி தாதரி சைலமாத்ர: ஸத்யோ பவந் கில ஜகர்ஜித கோர கோரம் க: அஸௌ அசிந்த்ய மஹிமா கிடி: உத்தித: மே நாஸாபுடாத் கிமு பவேத் அஜிதஸ்ய மாயா இத்தம் விசிந்தயதி தாதரி சைலமாத்ர: ஸத்ய: பவந் கில ஜகர்ஜித கோர கோரம் कोऽसावचिन्त्यमहिमा किटिरुत्थितो मे नासापुटात् किमु भवेदजितस्य माया ? । इत्थं विचिन्तयति धातरि शैलमात्रः सद्यो भवन्किल जगर्ज्जिथ घोरघोरम्

குருவாயூரப்பா! “என்னுடைய மூக்கில் இருந்து வெளிப்பட்டதும், மிகுந்த திறமையும் மகிமையும் உடையதாகவும் காணப்படும் இந்தப் பன்றி யார்? யாராலும் வெற்றி பெற முடியாத விஷ்ணுவின் லீலையா இது?”, என்று ப்ரும்மா தன் மனதில் சிந்தித்தான். அப்போது நீ ஒரு பெரிய மலை அளவிற்கு வளர்ந்து மிகவும் பயங்கரமாகக் கர்ஜனை செய்தாய் அல்லவா?