Sriman Narayaneeyam - Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம் (ச்லோகம் 122)

Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம்

அங்குஷ்ட மாத்ர வபுருத்பதித: புரஸ்தாத் பூயோSத கும்பி ஸத்ருச: ஸமஜ்ரும்பதாஸ்த்வம் அப்ரே ததாவீதமுதீக்ஷ்ய பவந்தமுச்சை: விஸ்மேரதாம் விதிரகாத் ஸஹ ஸூநுபி: ஸ்வை: அங்குஷ்ட மாத்ர வபு: உத்பதித: புரஸ்தாத் பூய: அத கும்பி ஸத்ருச: ஸமஜ்ரும்பதா: த்வம் அப்ரே ததா வீதம் உதீக்ஷ்ய பவந்தம் உச்சை: விஸ்மேரதாம் விதி: அகாத் ஸஹ ஸூநுபி: ஸ்வை: अङ्गुष्ठमात्रवपुरुत्पतितः पुरस्तात् भूयोऽथ कुम्भिसदृशस्समजृम्भथास्त्वम् । अभ्रे तथाविधमुदीक्ष्य भवन्तमुच्चै - र्विस्मेरतां विधिरगात्सह सूनुभिस्स्वैः

குருவாயூரப்பா! இப்படித் தோன்றும்போது நீ கட்டைவிரல் அளவே இருந்தாய் (அங்குஷ்டம் என்றால் கட்டைவிரல். ப்ரஹ்மஸூத்திரத்தில் பரம்பொருளை “அங்குஷ்ட மாத்ர: புருஷ:” என்றே கூறப்பட்டது). அதன் பின்னர் பெரிய யானை அளவிற்கு நீ வளர்ந்தாய். தொடர்ந்து, மேகம் வரை வளர்ந்தாய். இப்படியாக நீ வானத்தின் அளவு உயர்ந்து வளர்ந்ததைக் கண்ட ப்ரும்மா, தன்னுடைய புத்ரர்களுடன் சேர்ந்து தானும் வியப்படைந்தான் அல்லவா?