Sriman Narayaneeyam - Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம் (ச்லோகம் 121)
Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம்
ஹா ஹா விபோ ஜலமஹம் ந்யபிபம் புரஸ்தாத் அத்யாபி மஜ்ஜதி மஹீ கிமஹம் கரோமி இத்தம் த்வதங்க்ரியுகளம் சரணம் யதோSஸ்ய நாஸாபுடாத் ஸமபவ: சிசுகோலரூபீ ஹா ஹா விபோ ஜலம் அஹம் ந்யபிபம் புரஸ்தாத் அத்யாபி மஜ்ஜதி மஹீ கிம் அஹம் கரோமி இத்தம் த்வத் அங்க்ரி யுகளம் சரணம் யத: அஸ்ய நாஸாபுடாத் ஸமபவ: சிசு கோல ரூபீ हा हा ! विभो ! जलमहं न्यपिबं पुरस्ताद् अद्यापि मज्जति मही किमहं करोमि ? । इत्थं त्वदङ्घ्रियुगळं शरणं यतोऽस्य नासापुटात् समभवश्शिशुकोलरूपी
குருவாயூரப்பா! உன்னிடம் வந்த ப்ரும்மா, “எங்கும் நிறைந்துள்ளவனே! நான் ப்ரளயத்தின் முடிவில் அதிகமாகவே நீரைக் குடித்து விட்டேன். இருந்தாலும் இன்னமும் பூமி மூழ்குகிறது. நான் என்ன செய்வது? கஷ்டம்! கஷ்டம்!”, என்று கூறியபடி உனது திருவடியில் சரணம் என்று புகுந்தான். அப்போது அவனைக் காப்பாற்ற அவனது மூக்கில் இருந்து நீ வெண்மையான பன்றிக் குட்டியாகத் தோன்றினாய் அல்லவா? (இப்படியாகத் தோன்றியதால் இந்த கல்பத்திற்கு ஸ்வேத வராஹ கல்பம் என்று பெயர் ஏற்பட்டது).