Sriman Narayaneeyam - Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம் (ச்லோகம் 120)

Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம்

கஷ்டம் ப்ரஜா: ஸ்ருஜதி மய்யவநீர்நிமக்நா ஸ்தாநம் ஸரோஜபவ கல்பய தத் ப்ரஜாநாம் இத்யேவமேஷ கதிதோ மநுநா ஸ்வயம்பூ: அம்போருஹாக்ஷ தவ பாதயுகம் வ்யசிந்தீத் கஷ்டம் ப்ரஜா: ஸ்ருஜதி மயி அவநீ நிமக்நா ஸ்தாநம் ஸரோஜபவ கல்பய தத் ப்ரஜாநாம் இதி ஏவம் ஏஷ கதித: மநுநா ஸ்வயம்பூ: அம்போருஹாக்ஷ தவ பாதயுகம் வ்யசிந்தீத் कष्टं प्रजाः सृजति मय्यवनिर्निमग्ना स्थानं सरोजभव कल्पय तत्प्रजानाम् । इत्येवमेष कथितो मनुना स्वयम्भू - रम्भोरुहाक्ष ! तव पादयुगं व्यचिन्तीत्

தாமரைமலர் போன்ற அழகான திருக்கண்களை கொண்ட குருவாயூரப்பா! மனு நான்முகனிடம், “நான் மக்களைப் படைத்துக் கொண்டிருக்கும்போதே இந்தப் பூமியானது முற்றிலும் நீரில் மூழ்கி விட்டது. இது வருத்தமடைய வைக்கிறது. ப்ரும்மாவே! நான் படைக்கும் மக்களுக்கு அவர்கள் வாழ ஓர் இடத்தை உண்டாக்கவேண்டும்” என்று வேண்டினான். இப்படியாக மனுவால் வணங்கப்பட்ட ப்ரும்மா, உன்னுடைய திருவடிகளை அல்லவா த்யானித்தான்?